தர்மபுரி: போக்குவரத்து பணிமலையில் கழிப்பறைகள் எம்எல்ஏ திறப்பு

56பார்த்தது
தருமபுரி நகர போக்குவரத்து பணிமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஷ்வரன் ஆய்வு செய்ய சென்றார். பணிமனையில் கூடுதல் நவீன கழிப்பறை அமைக்க வேண்டும் என்று பணியாளர்கள், தொழிற் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். சட்டமன்ற உறுப்பினர் மேம்பாடு நிதியில் நவீன கழிவறை கட்டிடம் மற்றும் நடைப்பாதை சிமெண்ட் தளம் ரூபாய் 19.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்க உடனடியாக பரிந்துரை செய்தார். 

அப்பணிகள் தற்போது முடிக்கப்பட்ட நிலையில் பணியாளர்களின் பயன்பாட்டிற்காக தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஷ்வரன் தொடங்கி வைக்க இன்று வருகைப்புரிந்தார். அங்கிருந்த பணியாளர்களை அழைத்து தங்கள் கைகளினால் ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்க கேட்டுக்கொண்டார். பணியாளர்கள் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர். பின்னர் கழிப்பறையை துய்மையாகவும், சுகாதாரமாகவும் பயன்படுத்த அறிவுறுத்தினார். 

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துக்கழக பொது மேலாளர் கே. செல்வம், துணை மேலாளர் இளங்கோ, கிளை மேலாளர் சுதாகர், பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் தில்வியா ஏஞ்சலின், உதவிப் பொறியாளர் ரஞ்சிதா, பாட்டாளி போக்குவரத்து தொழிற்சங்க தருமபுரி மண்டல பொது செயலாளர் கோ. ராஜா, தருமபுரி மண்டல தலைவர் கே. மாதப்பன், தருமபுரி மண்டல பொருளாளர் சி. சுந்தரமூர்த்தி, மற்றும் போக்குவரத்து பணியாளர்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்

தொடர்புடைய செய்தி