தர்மபுரியில் மாம்பழ விற்பனை ஜோர்

82பார்த்தது
தர்மபுரி மாவட்டத்தில் பல நூறு ஏக்கர்களில் மாம்பழம் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர் தற்போது மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது. மேலும் இங்கு சாகுபடி செய்யப்படும் மாமலங்கள் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சேலம் பெங்களூரு சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தர்மபுரி உழவர் சந்தைகளிலும், சாலையோர கடைகளிலும் மாம்பழ விற்பனை கலை கட்டி உள்ளது இந்த நிலைகள் தர்மபுரி உழவர் சந்தையில் இன்று மாம்பழ விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது குறிப்பாக மாங்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், மல்கோவா மாம்பழம் ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், நீலம் மாம்பழம் கிலோ 50 ரூபாய்க்கும், பங்கனபள்ளி மாம்பழம் கிலோ 40 ரூபாய்க்கும், செந்தூர மாம்பழம் கிலோ 40 ரூபாய்க்கும் , அல்போன்சா மாம்பழம் கிலோ 60 ரூபாய்க்கும், பீத்தார் கிலோ 40 ரூபாய்க்கும் என விற்பனையானது.

தொடர்புடைய செய்தி