தருமபுரி மாவட்ட கனிமவளத்துறையினர் நேற்று (டிசம்பர் 20) இரவு தொப்பூர் பெட்ரோல் பங்க் அருகே வாகன தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி பிடித்து சோதனை செய்ததில் அனுமதி சீட்டு இன்றி ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள கிரானைட் கல் கடத்தி வந்தது தெரிய வந்தது. ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள லாரியுடன் தொப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.