தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு பௌத்த அறநெறியாளர் சங்கத்தின் சார்பில் பௌத்தர்கள் சேர்ந்து உலக மகளிர் தின கருத்தரங்கம் மற்றும் நிகழ்காலத்தில் வாழ்வு வாழ்வோம் பௌத்த தியான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பெங்களூரை சேர்ந்த பிக்கினி புத்தம்மா நாகசேனா புத்த விகாரை அவர்கள் பௌத்த வழிபாடு உறுதிமொழி மற்றும் 13 நபர்களுக்கு பௌத்தம் ஏற்பு தீட்சை வழங்கினார்.
இதில் பொருளாளர் மாதையன், மாநில தலைவர் தம்மசுடர், துணை ஆட்சியர் ஓய்வு செல்லரத்தினம் கேசவன், திரைப்பட இயக்குனர் மாரி கருணாநிதி, ஆய்வறிஞர் தேவ திருவருள், புதுச்சேரி பாவலர் யாழ் தமிழன், வழக்கறிஞர் செல்வகுமார் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுஜாதா சரவணன், Dr. ரவிச்சந்திரன், அசோக் சாம்ராட், மணிமேகலை மகளிர் மன்றம் சிவகாமி மாதையன், ராஜேஸ்வரி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அமரவேல் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக டாக்டர் ஆனந்த செல்வம் நன்றியுரை வழங்கினார்.