தர்மபுரி நகரப் பேருந்து நிலைய வளாகத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது இங்கு தினசரி கொண்டு வரப்படும் பூக்கள் சேலம் மற்றும் கிருஷ்ணகிரி ஓசூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீப நாட்களாக பொழிந்த மழை மற்றும் பனிப்பொழிவின் காரணமாக பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலை கணிசமாக குறைந்துள்ளது. பூக்கள் சந்தையில் இன்றைய (மார்ச். 15) விலை (விலை கிலோவில்) நிலவரம், குண்டு மல்லி ரூ. 500, சன்ன மல்லி ரூ. 600,
கனகாம்பரம் ரூ. 450, ஜாதி மல்லி ரூ. 300, காக்கட்டான் ரூ. 240, கலர் காக்கட்டான் ரூ. 200, நாட்டு சம்மந்தி ரூ. 120, ஹைப்ரேட் சம்மந்திரூ. 90 சம்பங்கிரூ. 80, அரளிப்பூ ரூ. 140 பன்னீர் ரோஸ் ரூ. 100, செவ்வரளி ரூ. 180, நந்தி வட்டம் ரூ. 60 பட்டன் ரோஸ்ரூ. 120 என்ற விலையில் விற்பனை நடைபெறுகிறது.