தருமபுரியில் பாமக கௌரவ தலைவர் ஜி. கே. மணி பேட்டி.

63பார்த்தது
தருமபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் காவிரி உபநீர் திட்டத்தை செயல்படுத்த கோரி அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் தருமபுரியில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி. கே. மணி நேற்று அக்டோபர் 02 மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் நாளை மறுநாள், அக்டோபர் நான்காம் தேதி காவிரி உபநீர் திட்டத்தின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில், தண்ணீர் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த கோரி, அரசை வலியுறுத்தும் வகையில், முழு நாள் இல்லாமல் காலை 6 மணி முதல் 12 மணி வரை அரை நாள் கடையடைப்பு அல்ல அதை அரை நாள் விடுமுறை விட வேண்டும் என்று தான் கேட்டுள்ளோம்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள பெட்டிக்கடை முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரையில் உள்ள வணிகர்களை கேட்டுக் கொள்கிறோம். மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் ஒருங்கிணைந்து, இதுதான் மாவட்டத்தின் வளர்ச்சி, வாழ்வாதாரத்திற்கான திட்டம் என்பதை அரசின் கவனத்தை ஈர்க்கின்ற வகையில், அடையாள போராட்டம். இது பகல் 12 மணி வரை அரை நாள் கடையடைப்பு போராட்டம் செய்து அரசின் கவனத்தை ஈர்த்துக் கோரிக்கை விடுக்கின்றோம்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி