தர்மபுரி: கடும் பனிப்பொழிவு, ஊட்டி போல் மாறிய தருமபுரி

53பார்த்தது
தமிழகத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பரவலாக கனமழை பொழிந்த நிலையில் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோசன நிலை நிலவி வருகிறது. இதனை அடுத்து மார்ச் 13 இன்று காலை நிலவரப்படி தர்மபுரி நல்லம்பள்ளி பென்னாகரம், அரூர், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, சிட்லிங், வத்தல்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி உள்ளது. இதனால் அதிகாலை நேரங்களில் நடைபெறும் அத்தியாவசிய விவசாய பணிகள் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் சற்று அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இரு தினங்களில் பொலிந்த கன மழையின் காரணமாக சீதோஷ நிலை மாறி ஊட்டி போல் குளுகுளுவென மாறி உள்ளது தர்மபுரி மாவட்டம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி