தர்மபுரி: தர்மபுரியில் இடி மின்னலுடன் விடிய விடிய கனமழை

70பார்த்தது
தமிழகத்தில் தர்மபுரி மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் ஜூன் 11ஆம் தேதி வரை கன மழை பொழிய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் மற்றும் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று கடுமையான வெப்பம் நிலவியது எந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் இன்று ஜூன் 9 விடியற்காலை 3 மணி வரை தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி, லளிகம், கோவிலூர், தொப்பூர், பாளையம் புதூர் மற்றும் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடமடை, காரிமங்கலம்ஸ் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை விடிய விடிய கொட்டி தீர்த்தது ஒரே நாளில் கொட்டிய கனமழையால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது நேற்று இரவிலிருந்து தற்போது வரை பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு பகுதிகளில் மின் நிறுத்தும் அமலில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி