தர்மபுரி: கம்பைநல்லூரில் 29 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

5பார்த்தது
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக பிரத்தியேகமாக வார சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு தர்மபுரி மாவட்டம் மற்றும் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர் நேற்று நடைபெற்ற சந்தையில் சிறிய ஆடுகள் 5, 000 ரூபாய் முதல் பெரிய ஆடுகள் 10, 000 ரூபாய் வரை என நேற்று ஒரே நாளில் 29 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி