தர்மபுரி: நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர்

85பார்த்தது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 77வது பிறந்தநாளையொட்டி இன்று பிற்பகல் அதிமுக தொண்டர்கள் சுபாஷ், அழகிரி, குபேந்திரன் ஏற்பாட்டில் தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் 10 நபர்களுக்கு தையல் மிஷன், 10 நபர்களுக்கு சலவைபெட்டி, ஆயிரம் மகளிருக்கு புடவைகளை அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மாவட்ட செயலாளர் கே. பி அன்பழகன் எம்எல்ஏ மற்றும் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், ஆகியோர் வழங்கினர். முன்னதாக எம்ஜிஆர், அம்மா திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த பின் அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சருக்கு நினைவு பரிசாக வீரவால் வழங்கப்பட்டது அதனையடுத்து ஆயிரம் பேருக்கு நலதிட்ட உதவிகளை வழங்க ஏற்பாடு செய்த சுபாஷ் அவர்களுக்கு நினைவு பரிசுகளை அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் கே. பி. அன்பழகன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ். ஆர். வெற்றிவேல், நகர செயலாளர் பூக்கடை ரவி, ஒன்றிய செயலாளர்கள் சிவபிரகாசம், பழனி, வழக்கறிஞர் செந்தில், செந்தில்குமார் பாலாஜி மோகன் பரணிதரன், மற்றும் அதிமுக தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி