தர்மபுரி: நூலகத்திற்கு இருக்கைகள் வழங்கிய முன்னாள் ராணுவவீரர்

51பார்த்தது
தர்மபுரியை சேர்ந்தவர் சேரன் செங்குட்டுவன், இவர் ராணுவத்தில் கர்னலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது சகோதரர்கள் ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, ஓய்வு பெற்ற விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் சகோதரி ஓய்வு பெற்ற ஆசிரியை மணிமேகலை ஆகியோர் தங்களது பெற்றோர் பொன்னுசாமி- மணிமேகலை ஆகியோரது நினைவாக தர்மபுரி சந்தைப்பேட்டையில் உள்ள நகராட்சி நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கு வசதியாக ரூ. 2 லட்சம் மதிப்பில் 50 இருக்கைகளை நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாதுவிடம் நேற்று மாலை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் தி. மு. க. நகர செயலாளர் நாட்டான் மாது, நகரமைப்பு அலுவலர் ஜெயவர்மன் ஆகியோர் உடன் இருந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி