தர்மபுரி: கிழக்கு மாவட்ட தி. மு. க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

64பார்த்தது
தர்மபுரி கிழக்கு மாவட்ட தி. மு. க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அமைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நகர செயலாளருக்கு நாட்டான் மாது வரவேற்றார். முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணை செயலாளர்கள் உமாசங்கர், ரேணுகாதேவி, மாநில நிர்வாகி செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் ஆ. மணி எம். பி. , மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளரும், தர்மபுரி தொகுதி பார்வையாளருமான டி. செங்குட்டுவன், பென்னாகரம் தொகுதி பார்வையாளர் பாரி தீர்மானங்கள் குறித்து விளக்கிப் பேசினார்கள். தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 30 சதவீதம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, வருகிற சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு பூத் அளவிலான தேர்தல் பணிகுழு அமைப்பது, பூத் அளவிலான இளைஞர் அணி நிர்வாகிகளை நியமிப்பது, அனைத்து ஊராட்சிகள் மற்றும் வார்டுகளில் கூட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி