தர்மபுரி நோக்கி காங்கேயம் பகுதியில் இருந்து டேங்கர் லாரி சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த குழந்தைவேலு ஓட்டி வந்து கொண்டிருந்தார். நேற்று அக்டோபர் 05 மாலை சேலம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், குண்டல்பட்டி என்ற இடத்தில் வந்தபோது, உணவு சாப்பிடுவதற்காக லாரியை நிறுத்தினார். பின்னர், மறுபுறம் உள்ள ஓட்டலுக்கு குழந்தைவேலு செல்வதற்காக சாலையை கடந்தார்.
அந்த நேரத்தில் சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அடுத்துள்ள மருளையாம் பாளையத்தை சேர்ந்த நவீன்குமார் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் குழந்தைவேலு மீது மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தைவேலு உயிரிழந்தார். நவீன்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மதிகோண்பாளையம் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.