தர்மபுரி: துர்க்கையம்மனுக்கு பால்குட ஊர்வலம்

0பார்த்தது
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ துர்க்கையம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆனி மாதம் லட்சார்ச்சனை தேர்த்திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு துர்க்கையம்மன் கோவில் 34-வது ஆண்டு லட்சார்ச்சனை தேர்த்திருவிழா தொடங்கியது. விழாவையொட்டி மேளதாளங்கள் முழங்க பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது. பின் துர்க்கையம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம், வழிபாடுகள் மற்றும் உபகார பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு மகாதீபாரதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி