தர்மபுரி: நூலகத்தில் திருவள்ளுவர் சிலைக்கு ஆட்சியர் மரியாதை

62பார்த்தது
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் கடல் மட்டத்திலிருந்து 30 அடி உயரத்தில் அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவச்சிலை கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுபெறவுள்ள நிலையில் அதற்கான வெள்ளி விழாவினை அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் 23 முதல் 31 வரை திருவள்ளுவர் புகைப்பட கண்காட்சி மற்றும் திருக்குறளின் பெருமையை உணர்த்தும் நிகழ்ச்சிகள் கொண்டாட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும் வெள்ளி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் இன்று நடந்த வெள்ளி விழா கொண்டாடத்தின் தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சி தலைவர், திருவள்ளுவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து திருக்குறளும் அதற்கான விளக்கப்பட ஓவியங்களையும், திருக்குறள் சார்ந்த புத்தக கண்காட்சியையும் பார்வையிட்டார். விழாவில் அனைவரும் திருக்குறளை அதன் பொருளறிந்து வாசித்து வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே திருக்குறளின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த வேண்டும். அனைவரும் இதில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என பேரூரையாற்றினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி