தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிராம சபை கூட்டம், கலைஞர் கனவு இல்ல பயனாளிகளை தேர்வு செய்தல், அனைத்து அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகள் போன்ற பணிகளை இறுதி செய்து கிராம சபையில் தீர்மானமாக வைப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையிலும், நிர்வாக காரணங்களாலும் 23. 03. 2025 –க்கு பதிலாக 29. 03. 2025 சனிக்கிழமை அன்று காலை 11. 00 மணி முதல் நடத்தப்படவுள்ளது.
22. 03. 2025 தண்ணீர் தினத்தன்று நடைப்பெற இருந்த கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களால் 29. 03. 2025 அன்று - நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய பொருள்கள் விவரம். உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதித்தல். கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல். கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல். சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல். உருவாக்குதல் குறித்து விவாதித்தல். தொழுநோய் விழிப்புணர்வு குறித்து விவாதித்தல், இதர பொருள்கள் குறித்து விவாதித்தல் உள்ளிட்ட பொருள்கள் கிராமசபை கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இவ்வாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ், இ. ஆ. ப. , தெரிவித்துள்ளார்.