தர்மபுரி: மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

65பார்த்தது
தருமபுரி நகரம் நியூகாலனியை சேர்ந்த அமரர் நரசிம்மன் அவர்களை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு
உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை நரசிம்மன் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தையெட்டி சின்னம்மாள் நரசிம்மன் 250 மாணவர்களுக்கு நோட்டு , எழுது பொருட்கள் உள்ளடக்கிய உபகரணங்கள் வழங்கினார். சிங்கப்பூரில் உள்ள பேங்க் ஆஃப் அமெரிக்கா துணைத்தலைவர் திருமாள் நரசிம்மன் மற்றும் சிவக்குமார் தம்பிதுரை ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இந்தியா ஒரு வளரும் வல்லரசு அதில் மாணவர்களின் பங்கு மற்றும் சமகால சாதனையாளர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். பின்னர் நடைபெற்ற கலந்துரையாடலில் சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி