தர்மபுரி: பாஜக மாநில துணை தலைவர் தர்மபுரியில் பேட்டி

54பார்த்தது
தர்மபுரி நீதிமன்றம் வளாகத்தில் நேற்று பாஜக மாநில துணைத் தலைவர் கே. பி. ராமலிங்கம் பேட்டி அளித்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள கைவினை கலைஞர்கள், சிற்பக் கலை வல்லுநர்கள் உள்ளிட்டோர் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளோரின் வளர்ச்சிக்காக விஷ்வகர்மா திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை சாதி அடிப்படையிலான திட்டம் போல் சித்தரித்து தமிழக அரசு ஏற்காது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது, அப்பட்டமாக தமிழக மக்களை வஞ்சிக்கும், ஏமாற்றும் செயல்.
எதிர்காலத்தில் தமிழர்களின் பண்பாடு, நாகரிகம், கலச்சாரம் உலக அரங்கில் போய் சேரக் கூடாது என்ற நிலையை உருவாக்கும் நடவடிக்கை இது.

இந்தியாவின் இதர மாநிலங்கள் அனைத்திலும் இந்த திட்டம் ஏற்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் மறைமுக தாக்குதல் நடக்கிறது. வாக்களித்த மக்களுக்கு முதல்வர் செய்கிற மிகப்பெரிய துரோகம் இது.
60 ஆண்டுகளுக்கு முன்பு குலத்தொழில் என்றெல்லாம் கூறி ராஜாஜியை பழித்த செயலை இப்போதும் ஆரம்பித்துள்ளார்கள்
என கூறினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி