தர்மபுரி: அதகப்பாடி மண்டு மாரியம்மன் கோயில் திருவிழா

68பார்த்தது
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே அதகபாடி ஸ்ரீ மண்டு மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. விழாவையொட்டி காளியம்மன் அழைப்பும், பட்டாளம்மனுக்கு மாவிளக்கு அழைத்து வருதலும், செல்லியம்மனுக்கு அழைப்பு மற்றும் சிறப்பு பூஜைகளும் நடந்தது.
3ம் தேதி காலை 10 மணிக்கு கங்கை பூஜையும் மாலையில் கூழ் ஊற்றுதலும் நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை ஸ்ரீ மண்டு மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு ஆராதனை மற்றும் விசேஷ பூஜைகள் நடந்தது. பகல் 12 மணிக்கு மேல் மாவிளக்கு ஊர்வலம் தாரை தப்பட்டை மற்றும் வான வேடிக்கையுடன் நடந்தது. இதில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் நடன நாட்டிய கலை நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி