தர்மபுரி மாவட்ட அம்மா பேரவையின் சார்பில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முன்னாள் நகர கழக செயலாளர் முன்னாள் நகர மன்ற தலைவர் எஸ் ஆர் வெற்றிவேல் அவர்கள் தலைமையில் தின்னை பிரச்சாரம் நடைபெற்றது இதில் முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் கேபி அன்பழகன் முன்னிலை வகித்தனர் கழக விவசாய அணி மாநில தலைவர் டி ஆர் அன்பழகன் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி நகர செயலாளர் பூக்கடை ரவி. அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிச்சாமி தர்மபுரி நாடாளுமன்ற வேட்பாளர் அசோகன் ஆகியோர் பொதுமக்கள் இடையே துண்டு பிரசாதம் வழங்கினார்.
இதில் விலைவாசி உயர்வு மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு போன்ற திமுக அரசின் பற்றி பொது மக்களுக்கு தெளிவாக பொதுமக்களிடம் எடுத்துக் கூறினர். அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டது அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த அம்மா ஸ்கூட்டர், தாலிக்கு தங்கம், மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம் அம்மா உணவகம் போன்ற பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டது. எனவே வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தர்மபுரி மாவட்டத்தில் ஐந்து இடங்களில் வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் பாடுபட வேண்டும் 2026 இல் அதிமுக ஆட்சி அமைக்கும் அப்போது அதிமுக கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும் என பேரணியாக சென்று திண்னை பிரசாதம் செய்தனர்.