தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டி அருகே உள்ள வீடு ஒன்றில் நேற்று (டிசம்பர் 25) நாகப்பாம்பு இரையை விழுங்கிவிட்டு நகர முடியாமல் தவித்தப்படி இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதை தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் 4 அடி நீளமுள்ள நாகப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் பாம்பை வனப்பகுதியில் விடுவித்தனர்.