தென்மேற்கு பருவமழை பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

64பார்த்தது
தென்மேற்கு பருவமழை பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் தென்மேற்கு பருவமழை தொடர் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிசாத்தி, இ. ஆப தலைமையில் இன்று நடைபெற்றது.
தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவவர்களுடன ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அவசர உதவிக்கு அழைக்க சுய உதவி குழுக்கள்/ தன்னார்வ தொண்டு நிறுவனங்களின்
பட்டியல் தொலைபேசி எண்கள் பட்டியல் தயார் நிலையில் வைக்க வேண்டும். நடமாடும் மருத்துவ குழுக்கள், அவர்களின் தொலைபேசி எண்ங்கள் தயார் நிலையில் வைக்க வேண்டும்
மேலும், அவசரத் தேவைகள் / உதவிகள் / பேரிடர் கால வீடு / கால்நடை / மனித உயிரிழப்பு / போக்குவரத்து பாதிப்பு / சேதங்கள் பற்றிய தகவல்களை மாவட்ட திர்வாகத்திற்கு தெரிவிக்க மாவட்ட கட்டுப்பாட்டு மைய இலவச தொலைபேசி எண் 1077-ல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி. இ. ஆப, தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி