உரிமைத்தொகை பெற்றவர்களுக்கு வாழ்த்து மடல் அனுப்பும் பணி

3196பார்த்தது
தமிழ்நாடு அரசு கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் தமிழகம் முழுவதும் உள்ள மகளிருக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு மூன்று லட்சத்து 92 ஆயிரம் மனுக்கள் மகளிர் இடமிருந்து பெறப்பட்டது.

இதில் தகுதி உள்ளவருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டது. இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை பெற்ற மகளிருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து கடிதம் அவர்களது முகவரிக்கு அனுப்புவதாக அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள மகளிருக்கு முதலமைச்சர் கையொப்பமிட்ட வாழ்த்து மடல் அனுப்பு பணி நடைபெற்று வருகிறது. இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையைச் சார்ந்த கிராம நிர்வாக உதவியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் மகளிருக்கு வாழ்த்து மடல் அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மகளிர் உரிமை தொகை பெற்றவர்களுக்கான வாழ்த்து மடல், தபால் மூலமாக அவர்களது முகவரிக்கு வீடுகளுக்கே அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் வருவாய் துறையைச் சார்ந்த ஏராளமான பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி