தருமபுரி:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் தா. பாண்டியன் அவர்களின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இண்டூர் வட்டாரக்குழு சார்பில் இண்டூர்-பாப்பாரபட்டி சாலையில் உள்ள சகாதேவன் காலனியில் அனுசரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இண்டூர் வட்டார செயலாளர் மாது தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தோழர் தா. பாண்டியன் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. வட்டார துணை செயலாளர்கள் மாதையன், மணி, பொருளாளர் மாணிக்கம் முன்னிலை வகித்தனர். வட்டார நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ். பி. குட்டி வரவேற்றார். தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ந. நஞ்சப்பன கலந்து கொண்டு தோழர் தா. பாண்டியன் அவர்களின் நினைவுகளை எடுத்து கூறி பேசினார்.
மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தேவராசன், மாவட்ட செயலாளர் கலைச்செல்வம், மாநிலக்குழு சின்னசாமி, மாவட்ட துணை செயலாளர் மாதேஸ்வரன், மாவட்ட பொருளாளர் மாதையன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் கே. மணி உள்ளிட்டோர் தோழர் தா. பாண்டியன் அவர்களளுக்கு அஞ்சலி செலுத்தி பேசினார்கள்.
மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் கோபால, இண்டூர் வட்டாரக்குழு உறுப்பினர்கள் சின்னராசு, பாலகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினர்.