தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தகடூர் புத்தகப் பேரவை இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழா வருகின்ற அக்டோபர் நான்காம் தேதி துவங்க உள்ளது இதனை அடுத்து இதற்கான ஏற்பாடுகள் தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட பாரதிபுரம் மதுராபாய் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், மற்றும் பிரபல பேச்சாளர்கள் உரையாட உள்ளதால் மேடைகளும் அமைக்கப்பட்டு இருப்பதை நேற்று அக்டோபர் 01 மாலை தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் தகடூர் புத்தக பேரவை தலைவர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் உட்பட பலர் உடன் இருந்தனர்.