தர்மபுரி:
தருமபுரி மாவட்டம், தடங்கம் உரக்கிடங்கில் BIOMINING முறைப்படி குப்பைகளை பிரித்து அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்திஇன்று நேரில் பார்வையிட்டு, திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி மாவட்டம், தடங்கம் உரக்கிடங்கில் BIOMINING முறைப்படி குப்பைகளை பிரித்து அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர். கி. சாந்தி இன்று (18. 05. 2023) நேரில் பார்வையிட்டு, திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி நகராட்சியில் ரூ. 3. 00 கோடி மதிப்பீட்டில் தடங்கம் உரக்கிடங்கில் BIOMINING முறைப்படி குப்பைகளை பிரித்து அகற்றும் பணி தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகின்றது.
சுமார் 9 ஏக்கர் பரப்பளவில் 40 வருடங்களுக்கு மேலாக கொட்டப்பட்டிருந்த கழிவுகளை முதல் கட்டமாக 5 ஏக்கர் அளவில் குப்பைகள் அகற்றப்பட்டது. 2-ம் கட்டமாக 4 ஏக்கர் அளவில் உள்ள குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு இப்பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார்கள். மேலும், இந்த நிகழ்வினை அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு காண்பித்து விவரங்களை தெரிந்து கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்கள். மேலும், இப்பணிகள் முடிந்தவுடன் மேற்கூறிய பகுதிகளில் அடர்வன காடுகள் உருவாக்கிட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது நகராட்சி துப்புரவு அலுவலர் சூ. ராஜரத்தினம் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.