சந்தையில் திமுக வேட்பாளருக்கு கம்யூனிஸ்ட் வாக்கு சேகரிப்பு

76பார்த்தது
சந்தையில் திமுக வேட்பாளருக்கு கம்யூனிஸ்ட் வாக்கு சேகரிப்பு
தர்மபுரி:
தருமபுரி நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ. மணிக்கு ஆதரவாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏஐடியூசி தொழிற்சங்கம் இணைந்து இண்டூர் வார சந்தையில் கடைகள் மற்றும் பொது மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், இண்டூர் வார சந்தையில் நடைபெற்ற வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் எம். மாதேஸ்வரன், ஏஐடியூசி மாவட்ட பொது செயலாளர் கே. மணி தலைமையில் நடைபெற்றது.
இண்டூர் வாரச்சந்தை, தருமபுரி ரோடு, பென்னாகரம் ரோடு, பாப்பாரப்பட்டி ரோடு பகுதியில் உள்ள கடை, தனியார் அலுவலகம் மற்றும் பொது மக்களிடம் பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்களின் விலை குறையவும், சமூகநீதி
பாதுகாக்கவும் கூட்டாட்சி தத்துவத்தை பேணி காத்திடவும் வரும் 19-ம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத்
தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க கேட்டு பிரச்சாரம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி