முதல்வர் வருகை போக்குவரத்து மாற்றம் காவல் துறை தகவல்

66பார்த்தது
தமிழக முதல்வர் அவர்கள் இன்று (11. 07. 2024) ம் தேதி “மக்களுடன் முதல்வர்” மற்றும் பல்வேறு நலதிட்ட உதவிகளை துவக்கி வைக்க தருமபுரி மாவட்டத்திற்கு தொடங்க வருகை தர உள்ளதால், அவரது வருகையின் போது
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க காலை 08. 30 மணி முதல் நண்பகல்
1. 30 மணி வரை கிருஷ்ணகிரி முதல் சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும்
கனரக வாகனங்கள் 1) ஓசூர், கிருஷ்ணகிரியிலிருந்து சேலம் செல்லும் வாகனங்கள் அகரம் சந்திப்பு, காரிமங்கலம், திப்பம்பட்டி, மொரப்பூர், அரூர், அயோத்தியா பட்டிணம் வழியாக சேலம் மாவட்டத்திற்கும், 2) சேலத்திலிருந்து கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூர் செல்லும் கனரக வாகனங்கள் அயோத்தியா பட்டிணம், அரூர், மொரப்பூர், திப்பம்பட்டி, காரிமங்கலம் வழியாக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும், 3) தருமபுரியில் இருந்து சேலம்
செல்லும் இலகுரக வாகனங்கள் நல்லம்பள்ளி, முத்தம்பட்டி, பொம்மிடி, தீவட்டிப்பட்டி வழியாக சேலம் மாவட்டத்திற்கும், 4) சேலத்தில் இருந்து தருமபுரிக்கு செல்லும் இலகுரக வாகனங்கள் மேச்சேரி, பெரும்பாலை, பென்னாகரம் வழியாக தருமபுரி மாவட்டத்திற்கும்
செல்லுமாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி மார்க்கத்தில்
பயணிக்கவுள்ள பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மேற்படி சாலை மாற்றத்தை அறிந்து இடையூறு இல்லா பயணம் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அறிவிப்பு வெளியாகி உள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி