கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு கோரிய பாமக எம்எல்ஏக்கள்

67பார்த்தது
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு காவிரி உபரி நீரை கொண்டு வரும் வகையில் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி வருகிற 4-ம் தேதி அரை நாள் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு பா. ம. க. மற்றும் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு தர்மபுரி நகரில் பாமக கௌரவத் தலைவர் ஜி. கே மணி எம். எல். ஏ. , கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் தர்மபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் ஆகியோர் நேற்று செப்டம்பர் 29 மாலை விதி வீதியாக நடந்து சென்று பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினர்.

மேலும், உழவர் சந்தை, சந்தைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் காவிரி உபநீர் திட்டம் குறித்து எடுத்துக் கூறி இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டனர். அப்போது கட்சியின் மாநில துணைத்தலைவர் சாந்த மூர்த்தி, இளைஞர் சங்க மாநில செயலாளர் முருகசாமி, பசுமைத்தாயக மாநில துணைத்தலைவர் மாது, மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் சென்று ஆதரவு திரட்டினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி