ஏஐடியூசி போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகக்குழு  கூட்டம்

53பார்த்தது
ஏஐடியூசி போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகக்குழு  கூட்டம்
தர்மபுரி:
தருமபுரி மாவட்ட ஏஐடியூசி போக்குவரத்து தொழிலாளர் சங்கத்திதின் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்  தருபபுரியில் நடைபெபெற்றது.
கூட்டத்திற்கு  மண்டல தலைவர் பூபேஸ்குப்தா தலைமை வகித்தார். மண்டல பொது செயலாளர் சி. நாகராசன் வேலை அறிக்கை வாசித்தார். போக்குவரத்துக் கழக சம்மேளன பொது  செயலாளர் ஆர். ஆறுமுகம், துணை செயலாளர் எஸ். முருகராஜ், ஏஐடியூசி மாநில துணைத்தலைவர் கே. மணி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
கூட்டத்தில் போக்குவரத்து துறையில் தேவைக்கேற்ப காலிப் பணி இடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 15-வது ஊதியக்குழு  பேச்சுவார்த்தை உடனடியாக நடத்தி  போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்த வேண்டும். ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு  நிலுவையில் உள்ள. அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பலவேறு தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டன.
மேலும்  போக்குவரத்து கழகத்தில ஓட்டுநராக பணிபுரிந்த வரதராஜன் ஓய்வு பெற்றதையயடுத்து அவருக்கு தருமபுரி மாவட்ட ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளனம் சார்பில் பாராட்டி வாழ்த்து  தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் சம்மேளன துணைத்தலைவர் இரவி, மண்டல துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, மூர்த்தி, வேலாயுதம், நாராயணன்  மற்றும்  நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மண்டல பொருளாளர் கணேசன் நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி