தருமபுரியில் ஏஐடியூசி கட்டட தொழிலாளர்ள் சங்கம் ஆர்பாட்டம்

53பார்த்தது
தருமபுரியில் ஏஐடியூசி கட்டட தொழிலாளர்ள் சங்கம் ஆர்பாட்டம்
தருமபுரி:
ஏஐடியூசி கட்டட தொழிலாளர்கள் சங்கதத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் குழந்தைவேலு தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர்கள் முருகேசன், ராஜி, பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஏ. சி. மணி கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ். தேவராசன்,
மாவட்ட துணை செயலாளர் மாதேஸ்வரன்,
விதொச மாநில. செயலாளர் ஜெ. பிரதாபன், ஏஐடியூசி மாநில துணைத்தலைவர் கே. மணி ஆகியோர் கட்டுமானத் தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளையும் தமிழ்நாடு அரசு நிறைவேற்றி தர வேண்டும் என வலியுறுத்தி பேசினார்கள்.
ஆர்பாட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தில் கட்டுமானத் தொழிலலாளர்களுக்கு மத்திய சட்டப்படி தீபாவளி, பொங்கல் பண்டிகை பரிசு வழங்குவதை போல் தமிழ்ழ்நாடு அரசும் குறைந்தபட்சம் ரூ 5, 000 -ம் கட்டட. தொழலாளர்களுக்கு வழங்க வேண்டும். மாத ஓய்வூதியம் ரூ 6, 000 வழங்க வேண்டும். 55 வயது முடிந்த பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க. வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்களின் சமூக. பாதுகாப்புக்கு நலவரி 2 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை உயர்த்தி வசூல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி