தர்மபுரி உழவர் சந்தையில் 44 டன் காய்கறிகள் விற்பனை

266பார்த்தது
புரட்டாசி மாத நடு சனிக்கிழமை எனப்படும் 3-வது சனிக்கிழமை என்பதால் தர்மபுரி உழவர் சந்தையில் 44 டன் காய்கறிகளும், 3 டன் பழங்களும்விற்பனையானது. புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமை நாட்களிலும் பெரும்பாலான வீடுகளில் பொதுமக்கள் விரதம் இருந்து சாமிக்கு படையல் இட்டு வழிபடுவார்கள். பின்னர் பல்வேறு காய்கறிகளுடன் செய்யப்பட்ட உணவை குடும்பத்துடன் அருந்தி விரதத்தை முடித்துக் கொள்வார்கள்.

இதனால் புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமை நாட்களிலும் காய்கறிகள் விற்பனை படுஜோராக நடைபெறுவது வழக்கம். தர்மபுரி உழவர் சந்தையில் புரட்டாசி மாத நடு சனிக்கிழமை எனப்படும் 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு காய்கறிகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. அதிகாலை முதலே ஏராளமான விவசாயிகளும் பொதுமக்களும் உழவு சந்தைக்கு வரத் தொடங்கினர். ஒரே நாளில் மட்டும் இங்கிலீஷ் காய்கறிகள் (அக்ரோ காய்கறிகள்) மற்றும் நாட்டு காய்கறிகள் என மொத்தம் 44 டன் காய்கறிகளும், 4 டன் பழங்களும் விற்பனை ஆனது இதன் மொத்த மதிப்பு ரூ. 15 லட்சத்து 55 ஆயிரம் விற்பனையானது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி