குரூப் 4 போட்டித் தேர்வில் 11, 427 பேர் ஆப்சன்ட்

83பார்த்தது
குரூப் 4 போட்டித் தேர்வில் 11, 427 பேர் ஆப்சன்ட்
தமிழகம் முழுவதும் உள்ள காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் வனக்காப்பாளர் இளநிலை உதவியாளர் தட்டச்சர் உள்ளிட்ட குரூப் 4 பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டி தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது இதனை அடுத்து தர்மபுரி மாவட்டத்தில் 62630 பேர் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எழுத்து தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தனர் இவர்களுக்காக மாவட்ட முழுவதும் 228 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது நேற்று நடைபெற்ற தேர்வில் 51, 203 பேர் மட்டுமே தேர்வு எழுதினர் 11, 427 பேர் தேர்வு எழுத வரவில்லை அதாவது விண்ணப்பித்தவர்களை 18. 25% பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி