விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு 'KALAM: The Missile Man of India' என பெயரிடப்பட்டுள்ளது. ராமாயணத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'ஆதிபுருஷ்' படத்தை இயக்கிய ஓம் ராவத் இப்படத்தை இயக்க உள்ளார். பான் இந்தியா படமாக உருவாக உள்ள இந்த படத்தின் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.