நடிகர் தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்திலும் நடித்து வருகிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படம் வருகிற ஜுன் மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலுக்கான புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 'போய்வா நண்பா' எனத் தொடங்கும் இந்த பாடலை விவேகா எழுத, தனுஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.