உத்தரகாண்ட் - கர்வால் இமயமலையில் உள்ள யமுனோத்ரி கோயில் யாத்திரை நேற்று முதல் தொடங்கியது. யமுனோத்ரி தாமுக்கு செல்லும் சாலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. குறுகிய சாலையில் ஆபத்தாக மணிக்கணக்கில் நின்று கடும் சிரமத்தை சந்தித்து வருவதாக பக்தர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். பக்தர்களை கட்டுப்படுத்த போலீசார் இல்லை, உரிய வசதிகள் ஏற்பாடு செய்யப்படவில்லை என அம்மாநில முதல்வரை டேக் செய்து ட்வீட் செய்து வருகின்றனர்.