தீ மிதிக்கும்போது தவறி விழுந்த பக்தர் (வீடியோ)

87821பார்த்தது
தீ மிதிக்கும்போது பக்தர் ஒருவர் தடுமாறி தீயில் விழுந்தார். கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே உள்ள மல்பே ஐயப்பன் கோயிலின் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த திருவிழாவின்போது பக்தர்கள் தீ மிதித்தனர். அப்போது ஐயப்ப பக்தர் ஒருவர் தீ மிதிக்கும்போது திடீரென எதிர்பாராதவிதமாக தீயில் விழுந்தார். அவருக்கு உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி