விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில், திமுக முன்னாள் எம்எல்ஏ S. டேவிட் இணைந்துள்ளார். அதேபோல், அதிமுக முன்னாள் எம்எல்ஏ R. ராஜலட்சுமி, திராவிட முற்போக்கு மக்கள் கட்சி நிறுவனர் A. ஸ்ரீதரன், ஜேப்பியார் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியின் தலைவர் N. மரிய வில்சன், முன்னாள் நீதிபதி சி. சுபாஷ் ஆகியோர் இணைந்துள்ளனர். விஜய் முன்னிலையில், விருப்ப ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி கே.ஏ.அருண்ராஜ், தவெக இணைந்துள்ளார். அவருக்கு கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.