விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு படைத்து வரும் சாதனைகள் தொடர, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சி மன்றங்களுக்கும் "கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்" வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்றைய தினம், வேலூரில் நடைபெற்ற அரசு விழாவின் போது, வேலூர் - தருமபுரி - கிருஷ்ணகிரி - நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 866 ஊராட்சி மன்றங்களுக்கு, 33 வகையான விளையாட்டுகளுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்களைக் கொண்ட 1,406 Sports Kits-ஐ இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.