தவறி விழுந்த துணை முதலமைச்சர்.. பதறிய அதிகாரிகள்

54பார்த்தது
பெங்களூரு: சட்டப்பேரவை வளாகத்திற்கு சைக்கிளில் வந்த கர்நாடக துணை முதல்வர் டி. கே. சிவகுமார், இறங்கும்போது தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சர் டி. கே. சிவகுமார். அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் உள்ளார். இந்த நிலையில், சட்டமன்ற வளாகத்திற்கு சைக்கிளில் வந்த டி. கே. சிவகுமார், சமநிலையை இழந்து கீழே விழுந்துள்ளார். இந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி