சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூன் 9) துறை சார்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. காலை 11 மணியளவில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள், வணிகவரி, கூட்டுறவு உள்ளிட்ட துறை சார்பிலான ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. இதில், அமைச்சர்கள் எ.வ. வேலு, மூர்த்தி, சக்கரபாணி, பெரியகருப்பன் மற்றும் துறை சார்பான செயலாளர்கள், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.