தமிழ்நாட்டில், கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 27,378 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு அதில் 13 நபர்கள் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 2023ம் ஆண்டை விட 2024ம் ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ளது. மேலும், 343 பேருக்கு மலேரியா நோய் பாதிப்பும், 2,817 பேருக்கு டைஃபாய்டு காய்ச்சல் பாதிப்பும் பதிவாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.