அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ள துணை அதிபர் வேட்பாளரை கமலா ஹாரிஸ் அறிவித்துள்ளார். மின்னசோட்டா மாகாண ஆளுநரான டிம் வால்ஸ் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 60 வயதான டிம் வால்ஸ் 2007 - 2019 வரை மின்னசோட்டா மாகாண எம்.பி.,யாக பதவி வகித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.