திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே ஜி.தும்மலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு கொடைக்கானல், பூலத்தூர் அடிவாரம், கோபால்சாமி கோயில் செல்லும் பகுதியில் 2,000 ஏக்கரில் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் மா, தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். பூலத்தூர் வனப்பகுதியிலிருந்து இரவு நேரங்களில் வெளியேறும் வன விலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. விவசாய தோட்டங்களை பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.