டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் அதிஷி வெற்றி பெற்றுள்ளார். தேசியத் தலைநகரில் பாஜக மகத்தான வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுகிறது. எனினும் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியை தழுவியுள்ளார். தெற்கு டெல்லியின் கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மியைச் சேர்ந்த முதலமைச்சர் அதிஷி வெற்றி பெற்றார். தற்போது பாஜக 48 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 22 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.