பட்டுக்கோட்டை அருகே ஜாமினில் எடுக்க காலம் தாழ்த்தியதால் கணவன் மனைவியை கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முள்ளூர்பட்டிக்காடு கிராமத்தை சேர்ந்த பால்ராஜ், வழக்கு ஒன்றில் சிறைக்கு சென்ற நிலையில், அவரை ஜாமினில் எடுக்க காலதாமதமாகியுள்ளது. இதையடுத்து, ஜாமினில் வெளிவந்த பால்ராஜ், மனைவியின் வாயில் பூச்சிக்கொல்லி மாத்திரையை திணித்து கொலை செய்துள்ளார். இதைத்தொடர்ந்து, அவரது மகள் அளித்த புகாரின் பேரில் பால்ராஜை கைது செய்யப்பட்டார்.