வார விடுமுறை.. 1,115 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு

53பார்த்தது
வார விடுமுறை.. 1,115 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு
வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 1,115 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 13, 14, 15 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை, நெல்லை, குமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்பும் பயணிகளுக்கு தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி