திருவள்ளூர் அருகே அதிகத்தூர் பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண், கடன் தொல்லை காரணமாக பிளேடால் கையை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மகாலட்சுமியின் கணவர் பாஸ்கருக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த ஓராண்டாக வீட்டுக் கடன் தவணைத் தொகையை கட்ட முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால், வீட்டை ஜப்தி செய்யப் போவதாக கூறிய அதிகாரிகள், மகாலட்சுமியை ஒருமையில் பேசியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மகாலட்சுமி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.