கொலை மிரட்டல்.. காவல் நிலையத்தில் திமுக எம்எல்ஏ புகார்

83பார்த்தது
கொலை மிரட்டல்.. காவல் நிலையத்தில் திமுக எம்எல்ஏ புகார்
விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் திமுக எம்எல்ஏ பிரபாகர ராஜா புகார் அளித்துள்ளார். அதில், “சென்னை வடபழனியில் முதியவருக்குச் சொந்தமான இடத்தை என்னுடைய தூண்டுதலின் பேரில் இடித்ததாக எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியாகி உள்ளது. துளி அளவும் சம்பந்தம் இல்லாத எனது பெயரை இணைத்து முறைகேடாக பொய்யான தகவலையும், கொலை மிரட்டல் விடுத்தாக தவறான தகவலையும் ஊடகங்களில் கூறி வரும் பால்ராஜ் என்பவரின் மகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி