கொல்கத்தா பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்த நிலையில் தண்டனை விவரங்களை நாளை (ஜன. 20) தெரிவிக்கிறது. தீர்ப்புக்கு பின்னர் சஞ்சயின் தாய் மாலதி கூறுகையில், "பெண் என்ற முறையில் என் மகன் செய்த தவறை மன்னிக்க முடியாது, பாதிக்கப்பட்ட தாயின் வலியை புரிந்து கொள்ள முடியும். அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் ஆட்சேபனை இல்லை" என்றார்.